"இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானாகப் பழகுகிறோம்" - பாஜக நயினார் நாகேந்திரன்
இன்று சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள உறவு குறித்துப் பேசியதுடன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையையும் கடுமையாக விமர்சித்தார்.
"தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நல்ல மனிதர், ஆனால் அவரது ஆட்சியைப் பற்றி என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. அவர்கள் (தி.மு.க.) இஸ்லாமியர்களுடன் அங்காளி, பங்காளிகளாகப் பழகலாம். ஆனால் நாங்கள் இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானாகப் பழகி வருகிறோம்," என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை, கோர்ட்டு உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். மாறாக 144 தடை உத்தரவு போடுவது என்பது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும்.
தீபம் ஏற்றுவதால் எந்த இஸ்லாமிய மக்களுக்கும் வருத்தம் இல்லை என்றும், பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடும் சூழலில், மக்களைச் சந்தோஷப்படுத்துவதற்குப் பதிலாக 2026 தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இஸ்லாமியர்களை வாக்கு வங்கிக்காக முதலமைச்சர் பயன்படுத்துகிறார் என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!