undefined

"5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்ட ஒரே இளைஞர் அணி எங்களுடையதுதான்!" - உதயநிதி பெருமிதம்!

 

திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், தங்கள் அணியின் அபரிமிதமான பலத்தைக் குறித்துப் பெருமிதத்துடன் பேசியுள்ளார். "ஒன்று கூடுவோம்..! வென்று காட்டுவோம்..!" என்ற முழக்கத்துடன் அவர் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டினார்.

இந்தச் சந்திப்பு குறித்துத் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டப் பதிவில், தங்கள் அணியின் பலத்தைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். "இந்திய அளவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே. 2026 தேர்தலில் மீண்டும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களே முதல்-அமைச்சர் ஆவார் என்பதை இந்த எழுச்சி நிரூபிக்கும்."

மேலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும் என்பதை உறுதிசெய்யும் வகையில், திருவண்ணாமலையில் 'வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு’ எழுச்சியுடன் நடக்கவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு, "ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!" என்று நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!