undefined

“டெல்லி படையெடுப்புக்கு அஞ்சமாட்டோம்” - முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு!

 

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தேர்தல் பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து மிக முக்கியமான அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். "டெல்லி படையெடுப்புக்குத் தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது; தமிழ்நாடு போராடும், தமிழ்நாடே வெல்லும்" என அவர் முழங்கியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுபட்டவர்களை இணைப்பதே முதல் கடமை: கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், "தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் பேரை நீக்கிவிட்டு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்தவர்கள் என்ற பெயரில் மட்டும் சுமார் 66 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த எஸ்.ஐ.ஆர். (SIR) நடைமுறை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று நாம் முன்பே எச்சரித்தோம். தற்போது நீக்கப்பட்டவர்களில் நம்முடைய ஆதரவு வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளனரா என்பதை வாக்குச்சாவடி வாரியாக கவனமாகப் பார்க்க வேண்டும். ஒரு தகுதியான வாக்காளர் விடுபட்டிருந்தால் கூட, உடனடியாகப் படிவம்-6 வழங்கி அவர்களைப் பட்டியலில் இணைக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

எதிரிகளின் குறுக்கு வழிக்கு இடம் தரக்கூடாது: அதிமுகவும் பாஜகவும் இந்தக் களத்தில் துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்று விமர்சித்த முதல்வர், அவர்களின் அமைதி சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். "நேர்வழியில் நம்மை வீழ்த்த முடியாத பாசிச சக்திகள், குறுக்கு வழியில் வெற்றி பெற நினைப்பார்கள். அதற்கு நாம் கடுகளவும் இடம் கொடுத்துவிடக் கூடாது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 75,032 வாக்குச்சாவடிகளுக்கும் உடனடியாகப் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். நம் கவனத்தைத் திசைதிருப்ப எதிரிகள் முயற்சிப்பார்கள், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டுத் தேர்தல் பணிகளில் பம்பரமாகச் சுழல வேண்டும்" என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

வெற்றியே இலக்கு: தேர்தல் நெருங்கும் வேளையில் பதற்றமோ, சோர்வோ அடையாமல் முழு பலத்தையும் கொடுத்து உழைக்க வேண்டிய நேரம் இது என்று முதல்வர் வலியுறுத்தினார். "களத்தில் நாம்தான் வலிமையாக இருக்கிறோம், நம்முடையதுதான் வெற்றிக் கூட்டணி. டெல்லியில் இருந்து வரும் எத்தகைய அழுத்தங்களுக்கும் தமிழ்நாடு அடிபணியாது" என்று உறுதியளித்த அவர், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்த்து விடுபடாமல் இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பேசிய இந்தப் பேச்சு, வரவிருக்கும் தேர்தலுக்கான போர்க்குரலாகவே பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!