கத்திரி இல்லாத வெயில் காலம்... வெதர்மேன் உற்சாக பதிவு!
தமிழகத்தில் நாளை மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது. இந்நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கத்திரி இல்லாத வெயில் தொடரும் என உற்சாக பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மே 4ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை 25 நாள்களுக்கு கத்திரி வெய்யில் நீடிக்கிறது. இந்நாளில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முதல் கத்திரி வெய்யில் தொடங்குகிறது. அதேவேளையில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெய்துவரும் மழையானது கத்திரியை தலைகாட்ட விடாமல் செய்துவிடும் எனக் கூறியுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எவ்வளவோ பரவாயில்லை. தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்திருந்தது.
வழக்கம் போல வேலூரில் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் மழை பெய்து அது தணியும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் பெய்தாலும் பெய்யலாம் அல்லது இல்லை என்ற நிலைதான்.வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களாக கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருப்பதியிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெங்களூருவிலும் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!