கல்யாண வீட்டு அலப்பறை.. பிராத்தனாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!
பொங்கல் ரிலீஸாக கடந்த ஜனவரி 15-ம் தேதி திரைக்கு வந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் காமெடி மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியுள்ள இப்படத்தில், நடிகர் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கல்யாணப் பெண்ணாக வரும் பிராத்தனா, திருமண வீட்டில் நடக்கும் கலாட்டாக்கள் மற்றும் அலப்பறைகளில் தனது துடிப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இவரது நடிப்பு குறித்துப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஒரு மணமகளுக்குரிய பதற்றத்தையும், அதே சமயம் காமெடியையும் லாவகமாக வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பிராத்தனா இதற்கு முன்பு ஹிட் படங்களான ’லவ் டுடே’ மற்றும் ’பார்க்கிங்’ ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!