2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை! 

 

தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவின் மகள் பாப்பாத்தி, தனது 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருடன் திருமணமான பாப்பாத்திக்கு, 8 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது தந்தை வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 28ம் தேதி காலை கடைக்குச் செல்வதாகக் கூறி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய பாப்பாத்தி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததால், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் மூன்று உடல்கள் மிதப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிணற்றில் இருந்து பாப்பாத்தி மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, பாப்பாத்தியும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்தப் பயங்கரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!