கிணற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி... குளிக்கச் சென்ற போது பெரும் சோகம்!  

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோடை வெயிலைத் தணிக்கக் கிணற்றுக்குச் சென்ற இரண்டு சிறுமிகள், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் கிராமத்தையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. 13 வயதான திவ்யாவும், 15 வயதான கவுசல்யாவும் ஜாலியாகக் குளிக்கலாம் என்று ஆசைப்பட்டு அருகில் இருந்த கிணற்றுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அந்த ஆசை சில நிமிடங்களிலேயே விபரீதமாக முடிந்துவிட்டது.

கிணற்றில் இறங்கும்போது எதிர்பாராத விதமாக ஒருவர் கால் தடுமாறி விழ, அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு சிறுமியும் ஆழமான பகுதிக்குச் சென்று சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. நீச்சல் தெரியாத நிலையில், இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் வீடு திரும்பாததால் பதறிப்போய்த் தேடிச் சென்ற பெற்றோருக்கு, கிணற்றில் மிதந்த சடலங்களைப் பார்த்ததும் நெஞ்சமே வெடித்துவிட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். "விளையாடப் போன பிள்ளைகள் இப்படிச் சடலமாக வருவார்கள் என்று நினைக்கவில்லையே" என அந்தப் பகுதி மக்கள் கதறி அழுவது பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், நீர்நிலைகளுக்குச் செல்லும் சிறுவர்கள் மீது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!