மம்தாவுக்கு செக் வைக்கும் முன்னாள் ஆதரவாளர்... புதிய கட்சி தொடங்கி 182 இடங்களில் போட்டி!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சவால் விடும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹுமாயுன் கபீர் 'ஆம் ஜனதா உன்னயன்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 182 இடங்களில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ள அவர், முதற்கட்டமாக 15 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மசூதி கட்டும் விவகாரத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்ட இவர், தற்போது மம்தாவுக்கு எதிராகத் தேர்தல் களம் காண்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் அவருக்கு எதிராகப் பூனம் பேகம் என்ற முஸ்லிம் வேட்பாளரை ஹுமாயுன் கபீர் களமிறக்கியுள்ளார். ஏற்கனவே இந்தத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுவதால், அங்கு போட்டி தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. கடந்த முறை நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, பின்னர் இடைத்தேர்தலில் வென்று பவானிபூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்குச் சாதகமாக இருக்கும் சிறுபான்மையின வாக்குகளைப் பிரிப்பதற்காகவே ஹுமாயுன் கபீர் திட்டமிட்டு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மே மாதம் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்தப் புதிய கட்சியின் வருகை திரிணமூல் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா அல்லது மம்தா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!