undefined

என்னென்ன அறிவிப்புகள் இருக்கும்? எகிறும் எதிர்பார்ப்பு...  நாளை மறுநாள் தவெக தேர்தல் அறிக்கைக் குழு ஆலோசனை!

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவை அண்மையில் (ஜனவரி 9) அறிவித்திருந்தார். இந்தக் குழுவின் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் குறித்துக் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 20ம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை, பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் தலைவர் விஜய் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்ட 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மையமாகக் கொண்டு தேர்தல் அறிக்கையை உருவாக்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

கட்சியின் கொள்கை மற்றும் பிரசாரச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலான இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்கள்: கே.ஜி. அருண்ராஜ், ஜே.சி.டி. பிரபாகர் (முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ), ஏ. ராஜ்மோகன் (துணைப் பொதுச்செயலாளர்), டி.எஸ்.கே. மயூரி, ஏ. சம்பத்குமார், எம். அருள் பிரகாசம், விஜய் ஆர். பரணிபாலாஜி, ஜே. முகமது ஃபார்வேஸ், டி.கே. பிரபு, கிறிஸ்டி பிரிதிவி, தேன்மொழி பிரசன்னா, எம். சத்தியகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். 

இந்தத் தேர்தல் அறிக்கைக் குழுவினர் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பு மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் தேவைகளைக் கேட்டறிந்து தரவுகளைச் சேகரிக்க உள்ளனர்.

தேர்தல் அறிக்கைக் குழுவைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 16-ம் தேதி 234 தொகுதிகளிலும் பிரசாரப் பணிகளை ஒருங்கிணைக்க 10 பேர் கொண்ட தேர்தல் பிரசார மேலாண்மைக் குழுவையும் விஜய் அறிவித்துள்ளார். இதில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், நடைமுறைக்குச் சாத்தியமான வாக்குறுதிகளை உள்ளடக்கியும் 'வெற்றி அறிக்கை'யைத் தயாரிப்பதே கட்சியின் முதன்மை இலக்காகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!