தொடை நடுங்கி... திடீரென போராட்டம் அறிவித்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?” அண்ணாமலை விளாசல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்ங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அதிரடி திடீர் சோதனை நடத்தினர். இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என கூறப்பட்டது. இதனை குறிப்பிட்டு இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென ஒருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என தங்கள் போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து தனது கடும் விமர்சனங்களை முன்வைத்து பதிவிட்டுள்ளார்” அண்ணாமலை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!