undefined

உங்க ராசிக்கு விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் எதை தானம் செய்தால் யோகம் வரும்?!

 

நாளை விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் தானம் செய்வது பித்ருக்களின் ஆசியையும், கிரக தோஷ நிவர்த்தியையும் தரும். உங்கள் ராசிக்கு எதை தானம் செய்தால் சிறப்பு என்று தெரிந்துக் கொள்ளுங்கள். 

நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள்  கோதுமை, வெல்லம் அல்லது சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம். இதனால் அரசு வழி ஆதாயம் பெருகும், தந்தை வழிச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

அதே போன்று நில ராசிக்களான ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் அரிசி, கற்கண்டு அல்லது பால் பொருட்கள் தானம் செய்வது சிறப்பு. இதன் மூலம் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும், பொருளாதார நிலை சீராகும்.

காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் பச்சைப்பயறு, குடை அல்லது காலணிகளை (செருப்பு) ஏழைகளுக்குத் தானம் செய்யலாம். இது புதன் மற்றும் சனி கிரகங்களின் தோஷத்தைக் குறைத்து, தொழிலில் லாபத்தைத் தரும்.

நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் தயிர் சாதம், இளநீர் அல்லது வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்யலாம். இதனால் மனக்குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும். தானங்களை நாளை அதிகாலை 6 மணி முதல் காலை 10 மணிக்குள் செய்வது மிகவும் உத்தமம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!