இந்தியர்களின் உரிமையுடன் விளையாடக் கூடாது... மெட்டா, வாட்ஸ்அப்பை உச்சநீதிமன்றம் கண்டிப்பு!
பயனர்களின் தரவு பகிர்வு என்ற பெயரில் இந்திய மக்களின் தனியுரிமை உரிமையுடன் விளையாடக் கூடாது என்று மெட்டா மற்றும் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்அப்பை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்ததைத் தொடர்ந்து, நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த இந்திய தொழில் போட்டி ஆணையம் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது.
இந்த அபராதத்துக்கு எதிராக மெட்டா நிறுவனம் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. தீர்ப்பாயம் அபராதத்தை உறுதி செய்தாலும், வாட்ஸ்அப் தனது தரவுகளை மற்ற மெட்டா நிறுவனங்களுடன் 5 ஆண்டுகள் பகிரக்கூடாது என்ற உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து இரு தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், நீதிபதிகள் வாட்ஸ்அப்பின் தரவு பகிர்வு கொள்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
பயனர்களின் ஒப்புதலுடன் மட்டுமே தரவு பகிரப்படுகிறது என்ற வாட்ஸ்அப் தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. கொள்கையை ஏற்க முடியாவிட்டால் பயன்பாட்டை விட்டு விலக வேண்டும் என்ற கட்டாயம் பயனர்களுக்கு ஏற்படுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்திய பயனர்களின் தரவுகள் வணிக சொத்தாக மாற்றப்படக் கூடாது என்றும், இந்த வழக்கில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தையும் இணைத்து பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!