செம... வாட்ஸ் அப்பில் Parent Controlled வசதி...  மெட்டா அதிரடி! 

 

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பயனர்களை பெற்று முண்ணனியில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் இணையப் பாதுகாப்பு குறித்து உலகம் முழுவதும் கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் அப்  செயலியில் புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் கணக்குகளை பெற்றோர் எளிதாக கண்காணிக்கும்படி இந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் செயலியை பயன்படுத்தும் போது அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் பெற்றோர் கவனிக்க முடியும். இதற்காக “பெற்றோர் கட்டுப்பாடு” என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மெட்டா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் சிறுவர்கள் தவறான நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!