வாட்ஸ் அப்பில் புதிய புரட்சி ...  மெசேஜ் படித்த 15 நிமிடத்தில் மாயமாகும் வசதி!  

 

உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், தனது பயனர்களின் தனியுரிமையைப்   பாதுகாப்பதில் எப்போதும் ஒரு படி மேலே இருக்கிறது. அந்த வகையில், தற்போது ‘After Reading’ எனப்படும் ஒரு அதிரடியான புதிய வசதியை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இந்த வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் அனுப்பும் மெசேஜை அந்த நபர் படித்து முடித்த அடுத்த 15 நிமிடங்களில் அது தானாகவே அழிந்துவிடும். ஒருவேளை அந்த மெசேஜ் திறக்கப்படாமல் இருந்தால், 24 மணிநேரத்திற்குப் பிறகு அது தானாகவே மாயமாகிவிடும் என ‘வாபீட்டா இன்போ’  தகவல் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வாட்ஸ்ஆப்பில் ‘Disappearing Messages’ என்ற வசதி இருந்தாலும், அது முழு உரையாடலுக்கும்   பொருந்தும் வகையில் இருந்தது. ஆனால், வரவிருக்கும் இந்த புதிய அப்டேட் மூலம், நாம் விரும்பும் குறிப்பிட்ட மெசேஜ்களை மட்டும் தேர்வு செய்து இந்த 'சுய அழிப்பு' முறையில் அனுப்ப முடியும். குறிப்பாக, வங்கிப் பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டுகள், ஓடிபி  எண்கள் மற்றும் மிக ரகசியமான தகவல்களைப் பகிரும்போது, இந்த வசதி பயனர்களுக்கு ஒரு மிகப்பெரிய கவசமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் ‘View Once’ வசதி ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது எழுத்து வடிவிலான மெசேஜ்களுக்கும் இத்தகைய பாதுகாப்பைக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பீட்டா வெர்ஷனில் இதற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் உலகில் தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்ளத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் அதிகாரிகளிடையே இந்த அப்டேட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!