undefined

 விபரீதம்... சமூக வலைதளங்களில் தொடர் அவமதிப்பு... வாட்ஸ்அப் குழு நிர்வாகி தற்கொலை!   

 
கர்நாடக மாநிலத்தில்  பெங்களூருவில்  வினய் சோமையா  தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 36. இவர் தன்னை பற்றிய சமூக ஊடகங்களில்  அவமதிப்பு மற்றும் விமர்சனங்கள் எதிரொலி காரணமாக  மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் இந்த முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இவர் “கொடகு பிரச்சனைகள்” என்ற வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகியாக இருந்த வினய், ஜனவரியில் காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வரின் சட்ட ஆலோசகர் ஏ.எஸ். பொன்னண்ணா பற்றிய சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று  பகிரப்பட்டதையடுத்து வழக்கில் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தார்.


இந்த புகாரின் அடிப்படையில், புகைப்படத்தை பகிர்ந்த நபரும், குழு நிர்வாகிகளான வினய் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்  அவர்களுக்கு முன்னறிவிப்பு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் ஜாமீனில் வந்த பிறகும், வினய்யின் புகைப்படங்கள் பல சமூக வலைதள குழுக்களில் பரப்பப்பட்டது. அத்துடன்  அவதூறான கருத்துகளும் பிரச்சாரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அவரது மனநிலையை மேலும் பாதித்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து விலகியதாக தெரிகிறது.  

தற்கொலை செய்ய இருந்த நாளில்  காலை, வாட்ஸ்அப் குழுவில் வினய் இறுதியாக, கொடகுவில் அமைதி நிலவவேண்டும், தவறான வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். அத்துடன்  பொது அவமதிப்பு மற்றும் சமூக ஊடகத் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்தார். அதன் பிறகு வினய் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக் குறிப்பு ஒன்றில், தன்னை அவமானப்படுத்தியவர்களின் பெயர்களை பதிவு செய்ததோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறான நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சைபர் துன்புறுத்தல்களின் மீது பெரும் விவாதத்தைக் கிளப்பி வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?