சக்கர நாற்காலியில் வந்த பெண் திடீரென எழுந்து நடந்த அதிசயம்... விமான நிலையத்தில் விநோதம்!
பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் சுமித் ரமணி என்பவர் விமான நிலைய ஓய்வறையில் கண்ட வினோதக் காட்சி குறித்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து ஓய்வறைக்கு வந்துள்ளார். ஆனால் உள்ளே நுழைந்த அடுத்த கணமே அவர் எவ்வித சிரமமும் இன்றி எழுந்து, சாதாரண மனிதரைப் போலத் தட்டில் உணவுகளை எடுத்து வந்ததைக் கண்டு சுமித் ரமணி வியப்படைந்துள்ளார்.
அதே சமயம் மற்றொரு தரப்பினர் அந்தப் பெண்ணுக்கு நீண்ட தூரம் நடக்க முடியாத மறைமுக உடல்நலப் பாதிப்புகள் இருக்கலாம் என்று அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். ஒருவேளை அவர் முறைப்படி பணம் செலுத்தி இந்தச் சேவையைப் பெற்றிருந்தால் அதில் தவறு ஏதுமில்லை என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். சக்கர நாற்காலி சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் அதன் அவசியம் குறித்த புதிய விவாதத்தை இந்தப் பதிவு இணையத்தில் உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!