"எவன் செத்தா எனக்கென்னன்னு இருக்கிற விஜய் எப்போது மக்கள் தொண்டு செய்தார்?" - ஆர்.பி. உதயகுமார்
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.பி. உதயகுமார், விஜய்யின் அரசியல் வருகையை 'திடீர் வரவு' எனக் கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் நாற்காலியைக் குறிவைப்பது குறித்து ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், "விஜய் இதுவரையில் எந்தவிதமான மக்கள் தொண்டையும் செய்யவில்லை. இப்போது திடீரென வந்து 'நான்தான் எல்லாம்' என்கிறார். எவன் செத்தாலும் சரி, நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற அவரது போக்கை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நல்லவேளை தமிழகத்திற்கு முதலமைச்சராவேன் என்று சொன்னார், இல்லையென்றால் அமெரிக்காவுக்கே ஜனாதிபதி நான்தான் என்று கூடச் சொல்லியிருப்பார்" எனக் காரசாரமாகக் கேலி செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையைப் பாராட்டிப் பேசிய அவர், "எடப்பாடியாரின் உழைப்பிற்கும், அரவணைப்பிற்கும், ஆளுமைக்கும் இன்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதனால்தான், எடப்பாடியார் தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்கும் என டெல்லி தலைமை (பாஜக) முடிவு செய்துள்ளது. இனி வரும் 50 ஆண்டுகளுக்கு அதிமுகவிற்குப் புதிய தலைவனைத் தேட வேண்டிய அவசியமில்லை. எடப்பாடியாரே நமக்கு நிரந்தர வழிகாட்டி" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
பதவிக்காகவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் அதிமுகவை விட்டுச் சென்றவர்களை அவர் சாடினார். "தன்மானத்துடன் கட்சியை இங்குக் காப்பாற்றி வைத்திருப்பதால்தான் அதிமுக இன்றும் வலிமையாக உள்ளது. அதிகாரத்திற்காகப் பயந்து ஓடியவர்கள் இன்று வீரவசனம் பேசுகிறார்கள்" என்றார்.
தேர்தல் களம் குறித்துப் பேசுகையில், "எம்.ஜி.ஆர் காலம் தொட்டு, ஜெயலலிதா காலம் வரை அதிமுகவிற்கு என்றும் நேரடிப் போட்டி திமுக மட்டும்தான். இடையில் வருபவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் திருமங்கலம் தொகுதி தனித்துவம் வாய்ந்தது என்றும், அங்குள்ள தொண்டர்களின் செல்வாக்கே அதற்குச் சான்று என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!