தவெகவிற்கு விசில் சின்னம்… வைரலான ‘விசில் போடு’ பாடல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமாக விசில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோட் படத்தின் ‘விசில் போடு’ பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. தவெக ஆதரவாளர்கள் இந்தப் பாடலை தங்களின் சின்னத்துக்கான தேசிய கீதம் போல பகிர்ந்து வருகின்றனர். இதனால் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்தப் பாடலை விஜய்யே பாடியிருந்தார். பாடல் வெளியான போது சாதாரண வரவேற்பையே பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அரசியல் சூழல் காரணமாக அந்தப் பாடல் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “அன்றே கணித்தார் விபி என்று சொல்கிறார்கள். இப்போது இந்தப் பாடல் தேசிய கீதம் போல மாறியிருப்பது மகிழ்ச்சி. சிஎஸ்கே பின்னணியால் முதலில் படத்துக்கு விசில் போடு என்ற பெயரே வைக்க நினைத்தோம். அப்போது சிலர் விமர்சித்தார்கள். இப்போது எல்லா தளபதி ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!