undefined

இந்தியாவில் வெள்ளை காலர் தீவிரவாதம்...   ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

 

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “வெள்ளை காலர் தீவிரவாதம்” என்ற ஆபத்தான போக்கு குறித்து கவலை தெரிவித்தார். உயர்கல்வி பெற்றவர்களே சமூகத்துக்கும் நாட்டுக்கும் எதிராக செயல்படுவது அதிர்ச்சியளிப்பதாக கூறினார். “கையில் டிகிரி, பாக்கெட்டில் RDX” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் மருத்துவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார். Rx எழுதும் கைகள் RDX ஏந்துவது அபாயம் என்றார். கல்வி இருந்தாலும் ஞானம் இல்லையெனில் தீவிரவாதமாக மாறும் நிலை உருவாகும் என்று எச்சரித்தார்.

இந்த போக்கு நாட்டுக்கு புதிய அச்சுறுத்தல் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கல்வியுடன் நல்ல மதிப்புகளும் பண்புகளும் வளர்க்கப்பட வேண்டும் என்றார். கல்வி நிறுவனங்களில் மதிப்புக் கல்வி அவசியம் என்றும், தீவிரவாதத்தை ஒழிக்க சமூக விழிப்புணர்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!