undefined

பாஜக புதிய தலைவர் யார்? நிதின் நபினுக்கு வாய்ப்பு அதிகம்? யார் இந்த நிதின் நபின்?!

 

இன்னும் 3 தினங்களில் பாஜகவின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், பாஜக தலைவர்களின் பார்வை நிதின் நபின் மீது குவிந்துள்ளது. ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கட்சியின் அடுத்த கட்டத் தலைமை குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

பாஜகவின் தேசிய தேர்தல் அதிகாரியான கே. லட்சுமண் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி: ஜனவரி 19, திங்கட்கிழமை (மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். ஜனவரி 19 (மாலை 4 மணி முதல்  5 மணி வரை வேட்பு மனுப் பரிசீலனை நடைபெறும். ஜனவரி 20ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும்.

யார் இந்த நிதின் நபின்?

தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிதின் நபின் குறித்த தகவல்களைப் பார்க்கலாம். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2025 டிசம்பர் 14-ஆம் தேதி பாஜகவின் தேசிய செயல் தலைவராக (National Working President) நியமிக்கப்பட்டார்.

46 வயதாகும் இவருக்குப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் முழுமையான ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இவர் தேர்வானால், பாஜகவின் மிக இளவயது தேசியத் தலைவராக இருப்பார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!