undefined

மார்கழி மாதத்தில் ஏன் வாசல் கோலத்தில் பூசணிப்பூ வைக்கிறோம்... இதுல இத்தனை விஷயமிருக்கா?!

 
இன்று மார்கழி மாதம் துவங்குகிறது. பொதுவாக மார்கழியை பீடை மாதம் என்கின்றனர். பீடு உடைய மாதம் என்பது தான் மருவி காலப்போக்கில் பீடை  மாதம் என்றாகி விட்டது. பீடு என்றால் பெருமை. பெருமை உடைய மாதம் . தமிழ் மாதங்களில் 9 வது மாதமாக வரும் மார்கழி பெரும் சிறப்புவாய்ந்தது.  மார்கழி மாதம்  தேவர்களுக்கு அதிகாலை . பூலோகத்தில்  ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகலாகவும்,  ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவாகவும் இருக்கும். அந்த வகையில் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் மார்கழி. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்த நேரத்தில் மானுடர்கள் இறைவனை வழிபட வேண்டியது அவசியம்.   

மாதங்களில் நான் மார்கழி என்கிறார் கிருஷ்ணபகவான்.  மார்கழி  தனுர் மாதத்தில் சூரியன்  தனுசு ராசியில் குருவின் வீட்டில் குடியேறுகிறார். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை துயிலெழுந்து மனமுருகி இறைவனை பிரார்த்திக்க மனதிற்கு பிடித்த கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது புராணங்கள் கூறும் நம்பிக்கை.  இந்த மார்கழி மாதம் முழுவதுமே பற்றற்ற வாழ்வை வாழ இறைவனின் திருவடியையே நினைத்திருக்க வேண்டும்.

 அதனாலாயே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஆன்மிகப் பெரியோர்கள். மார்கழி மாதத்தில்  அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிடுவது இல்லத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியமும் மேம்படும். இந்த நேரத்தில் ஓசோனில் வெளிப்படும் காற்றை சுவாசிக்க அந்த ஆண்டு முழுவதற்குமான ஆரோக்கியத்தை பெறலாம். மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிட்டுமாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பூசணிப்பூவை வைத்து வழிபாடு செய்வர்.

எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைக்கப்படுவது வழக்கம். அந்த காலகட்டத்தில் திருமண புரோக்கர்,  மேட்ரிமோனியல் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. பிள்ளைக்கு பெண் தேடுவோர் எந்த வீட்டு வாசலில் பூசணிப்பூ இருக்கிறதோ அந்த வீட்டில் பெண் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என்பது அர்த்தம். இதனை குறித்து கொண்டு தைமாதம் திருமணத்திற்கு பெண்பார்க்கும் வைபவத்தை நடத்துவர்.  பெண் தேடுபவர்களுக்கு எங்கள் வீட்டு பெண் திருமணத்திற்கு ரெடி என்பதை சூசகமாக அறிவிக்கவே வீட்டு வாசலில் பூசணிப்பூ. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!