காதல் ஜோடியை அரை நிர்வாணமாக காலில் விழ வைத்த கொடுமை... தஞ்சையில் நாட்டாமையின் அடாவடி தீர்ப்பு!

 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சுமன்(28) என்பவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் தங்கள் காதலை பெற்றோரிடம் கூறி, இரு வீட்டாரின் சம்மதத்துடன்  கடந்த 16ம் தேதி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுடைய சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட  தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இந்த ஊரில் யாரும் காதல் திருமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தம்பதி அளித்த அந்த மனுவில், எங்கள் திருமணத்தில் பங்கேற்ற எங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் அபராத தொகை கட்ட வேண்டும், சமூக தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர். 

இதனால் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அபராதம் கட்டி தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். எங்களை ஊரை விட்டு ஒதுக்கி சாணி கரைத்து சுத்தப்படுத்த வேண்டும். ஊரில் எந்த நிகழ்விலும் பங்கேற்க கூடாது. கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்ததால் பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர், இவ்வாறு அதில் கூறியிருந்தனர். 

எனவே ஊரை விட்டு ஒதுக்கிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் நவீன காலத்தில் இன்னமும் இது போன்று பிற்போக்கு தனமாக சிலர் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற தீண்டாமை சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்வும்  சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்