கணவரை சிலிண்டரால் அடித்துக் கொலை செய்த மனைவி ... கள்ளக்காதலால் கொடூரம்!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கேஸ் சிலிண்டரால் அடித்துக் கொன்ற மனைவி மற்றும் அவரது காதலனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெலகாவியைச் சேர்ந்த அவினாஷ் (40) என்பவர், தனது மனைவி லட்சுமி (29) மற்றும் கைலாஷ் (43) என்பவருக்கு இடையே இருந்த கள்ளத்தொடர்பைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவினாஷைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவினாஷை, லட்சுமி மற்றும் அவரது காதலன் கைலாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து கேஸ் சிலிண்டரால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவினாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தனது கணவர் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்ததாகக் கூறி லட்சுமி நாடகமாடியுள்ளார். இருப்பினும், தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவினாஷின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவினாஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் கீழே விழுந்து இறக்கவில்லை என்பதும், தலையில் பலமான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்தார் என்பதும் உறுதியானது. தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் சிலிண்டரால் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் லட்சுமி உண்மையை ஒப்புக்கொண்டார். திட்டமிட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக லட்சுமி மற்றும் அவரது காதலன் கைலாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!