குழந்தைக்கு ஸ்வெட்டர் வாங்க சென்ற போது லாரி மோதி மனைவி பலி... கணவன் கண்முன்னே சோகம்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரியைச் சேர்ந்த அப்புன் (35)–புஷ்பராணி (28) தம்பதியினர் கூலி தொழிலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஐந்து வயது குழந்தைக்காக ஸ்வெட்டர் வாங்க வாணியம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, வாங்கிச் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தெருநாய் ஒன்று வாகனத்தின் முன் குறுக்கே வந்ததால், அப்புன் திடீர் பிரேக் போட்டார். அதனால் பின்னால் அமர்ந்திருந்த புஷ்பராணி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர், பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் தாயின் திடீர் மரணம் மதனஞ்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!