பகீர்... கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி
காதல் வெளிச்சம்… கிரைண்டரில் சிதைந்த கணவன்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி கொலை
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் காணாமல் போன காலணி வியாபாரி ராகுல், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் சேர்ந்து இந்த கொலையை செய்தது விசாரணையில் அம்பலமானது. நவம்பர் 18 முதல் காணாமல் போனதாக நாடகமாடிய ரூபி, 20-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.
27 நாட்களுக்குப் பிறகு வடிகாலில் பாலிதீனில் சுற்றப்பட்ட சிதைந்த உடல் மீட்கப்பட்டபோது வழக்கு திருப்பம் கண்டது. கை மீது ‘ராகுல்’ என பச்சை குத்தப்பட்டிருந்ததன் மூலம் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்த இரும்புக் கம்பி, ரத்தக் கறைகள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் தகவல்கள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தின.
காதல் உறவை கணவன் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராகுல் கொல்லப்பட்டதாக ரூபியும் கௌரவமும் ஒப்புக்கொண்டனர். இரும்புக் கம்பியால் தாக்கி கொன்ற பின், உடலை கிரைண்டரில் துண்டுகளாக்கி பல இடங்களில் வீசியுள்ளனர். இந்த கொடூரத்திற்கு உதவிய அபிஷேக் உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!