undefined

பகீர்!! மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த  மருமகன் !!

 

சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கும், புளுதிவாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை என்ற இளைஞருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அண்மைக்காலமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து விஜயலட்சுமி கடந்த 12ஆம் தேதியன்று 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்குச் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் விஜயலட்சுமி எங்கே சென்றார், எங்கே உள்ளார் என்பது தற்போதுவரை தெரியவில்லை.

இதனையடுத்து, ஏப்ரல் 13ஆம் தேதி ஏழுமலை அதிக மதுபோதையில் மாமியார் முனியம்மா வசிக்கும் குடியிருப்புக்கு சென்று தகராறு செய்தார். அப்போது மனைவியை நீதான் எங்கேயோ மறைத்துவைத்துள்ளார் எனக்கூறி தகராறு செய்துள்ளார். அப்போது முனியம்மா கீழே வந்து அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் மாமியார் முனியம்மாவை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலை முயற்சி வழக்கில் ஏழுமலையை கைதுசெய்தனர். 

இதனிடையே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த முனியம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டு ஏழுமலை கைதுசெய்யப்பட்டார்.
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!