undefined

புதுமாப்பிள்ளையை கொலை செய்து மனைவி நாடகமாடியது அம்பலம்... ஈரோட்டில் அதிர்ச்சி! 

 

ஈரோடு அருகே உள்ள புதுமணத் தம்பதியினருக்குள் ஏற்பட்டக் குடும்பத் தகராறில், குடிபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை மனைவி தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். கணவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்ததாக நாடகமாடிய காதல் மனைவி சுஜித்ராவை, உடற்கூறு ஆய்வறிக்கையின் அடிப்படையில் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு கீழ் திண்டல் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மதன்குமார் (21), கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது உறவினரான சுஜித்ரா (19) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி இரவு மதன்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடப்பதாகக் கூறி, உறவினர்கள் அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மதன்குமார், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 11-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, சுஜித்ரா தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்து வந்துள்ளார். இந்த வழக்கில் முக்கியத் திருப்புமுனையாக, மதன்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், மதன்குமார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும், மாறாகத் தலையில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் சுஜித்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நடந்த உண்மை வெளியானது. மதன்குமாருக்கும், சுஜித்ராவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த மதன்குமார், பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறிய சுஜித்ராவுடன் வாக்குவாதம் செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த மதன்குமார் சுஜித்ராவின் கழுத்தைப் பிடித்துள்ளார்.

மதன்குமாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற சுஜித்ரா, ஆத்திரத்தில் மதன்குமாரைத் திடீரெனத் தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைத்தடுமாறிய மதன்குமாரின் தலை தரையில் மோதியதில் பலத்தக் காயமடைந்து மயங்கியுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்தத் தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, கணவரைக் கொலை செய்து விட்டுத் தற்கொலை நாடகமாடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சுஜித்ராவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!