undefined

கணவனின் கழுத்தை இறுக்கிக் கொன்ற மனைவி - விபத்து என நாடகமாடியது அம்பலம்!

 

ஐதராபாத்தில் வசித்து வந்த சுதீர் ரெட்டி - ஞான பிரசன்னா தம்பதியிடையே நீடித்து வந்த தீராத சந்தேகமே கொலைச் சம்பவத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஏலூரு மாவட்டத்தைச் சேர்ந்த சுதீர் ரெட்டி (44), ஐதராபாத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி ஞான பிரசன்னாவிற்கும் (40) இடையே ஒருவரையொருவர் நடத்தையில் சந்தேகித்ததால் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. சுதீர் ரெட்டி தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஞான பிரசன்னா அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு, போதையில் வந்த சுதீர் ரெட்டி தனது மனைவியின் நடத்தையைப் பற்றிக் கேவலமாகப் பேசி சண்டையிட்டுள்ளார். பின்னர் அவர் படுக்கையறையில் அயர்ந்து தூங்கியுள்ளார். கணவர் தூங்கிய பிறகு, ஆத்திரத்தில் இருந்த ஞான பிரசன்னா கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை விபத்து போலக் காட்ட, உடலைக் கட்டிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

மறுநாள் காலை உறவினர்களிடம் பேசிய ஞான பிரசன்னா, "கணவர் மது போதையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்" எனக் கூறி அனைவரையும் நம்ப வைக்க முயன்றுள்ளார். போலீசாரின் விசாரணையில் உண்மை தெரியவந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!