undefined

 தேனிலவுக்கு அழைத்துச் சென்று கணவர் கொலை... காவல்நிலையத்தில் சரணடைந்த மனைவி!

 
 

தேனிலவுக்கு அழைத்து சென்ற நிலையில், மேகாலயாவில், சிரபுஞ்சி அருகே கணவனைக் கொலைச் செய்து விட்டு, மனைவி உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.கடந்த மே 23ம் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம், மவ்லக்கியத் கிராமத்தில் ஹோம்ஸ்டே ஒன்றில் தங்கியிருந்த  புதுமணத் தம்பதிகளான ராஜா மற்றும் சோனம் ஆகிய இருவருமே காணாமல் போயினர். தேனிலவுக்காக மேகாலயா வந்திருந்த இந்த புதுமண தம்பதியர் காணாமல் போன நிலையில், வழக்கை தீவிரமாக விசாரிக்குமாறு மேகாலயா அரசாங்கத்துக்கு மத்தியப் பிரதேச அரசும், மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.

காணாமல் போன தம்பதியர் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம் சாலையோர ஓட்டலில்  கண்டறியப்பட்டது. தம்பதியர் காணாமல் போன நிலையில், செய்தி அறிந்து, ராஜா மற்றும் சோனமின் உறவினர்கள் மேகாலயாவை அடைந்து, அழுத்தம் கொடுத்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர், இந்த ஜோடி இந்தியில் பேசிக் கொண்டிருந்த மற்ற 3 பேருடன் மலையேறி செல்வதைக் கண்டதாகக் கூறிய போது, ​​காவல் துறைக்கு ஒரு முக்கியமான துப்பு கிடைத்தது. 

இதனையடுத்து கடந்த ஜூன் 2ம் தேதி 200 அடி பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட புதிய கத்தி, சடலத்தின் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. கொலை நடந்த இடத்திற்கு அருகில் ஒரு பெண்ணின் சட்டையும், அவர் பயன்படுத்திய மழைக்கோட்டும் கண்டெடுக்கப்பட்டன. ஆனாலும், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சோனமை காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் காசிபூர் மாவட்டத்தில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சோனம் ரகுவன்ஷி சரணடைந்ததாக மேகாலய அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜாவின் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரித்த பிறகு கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்று சோரா காவல் துறை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது