மனைவியின் கள்ளக்காதலன் அடித்துக் கொலை... வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் வெறித்தனம்!
ஜக்தியாலா பைபாஸ் சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மனைவியின் கள்ளக்காதலனை, வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் ஆத்திரத்தில் கொன்ற சம்பவம் தெலங்கானாவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அந்தர்கம் கிராமத்தைச் சேர்ந்த கங்காதர் என்பவருக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கங்காதர் வேலைக்காக வளைகுடா நாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் போரண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாத் (31) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கங்காதரின் மனைவி தனது குழந்தைகளைத் தவிக்கவிட்டு விஸ்வநாத்துடன் வீட்டை விட்டு வெளியேறி, ஜக்தியாலா பைபாஸ் அருகே தனியாக அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
வளைகுடாவிலிருந்து ஊர் திரும்பிய கங்காதர், தனது மனைவி வேறொருவருடன் குடும்பம் நடத்துவதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதி, பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மனைவியைத் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் கணவருடன் வர மறுத்து விஸ்வநாத்துடனே தங்கிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கங்காதர், விஸ்வநாத்தைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
சிவராத்திரியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை விஸ்வநாத் மற்றும் கங்காதரின் மனைவி இருவரும் சாரங்கபூர் பகுதியில் உள்ள திருவிழாவிற்குச் சென்றுவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஜக்தியாலா பைபாஸ் சாலையில் அவர்கள் வந்தபோது, அங்கு ஏற்கனவே காத்திருந்த கங்காதர் மற்றும் அவரது கூட்டாளிகள் விஸ்வநாத்தை வழிமறித்தனர்.
கண்மூடித்தனமாக விஸ்வநாத்தைக் கட்டையால் தாக்கியதில், அவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த பின், "என் மனைவி உனக்கு வேண்டுமா?" என்று கத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
விஸ்வநாத்தின் தந்தை சந்திரய்யா அளித்த புகாரின் பேரில் ஜக்தியாலா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் கருணாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள கங்காதர் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!