காட்டு யானை தாக்கி இருவர் பலி... பெரும் சோகம்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் 55 வயதான ரவி மற்றும் 66 வயதான லிங்கராஜ் இருவரும் பணி முடிந்து நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்த போது வழிமறித்த காட்டு யானை இருவரையும் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றிருந்தவர்கள் இருவரது உயிரிழந்தவர்களின் உடல்களை கண்டதும் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!