விங்கோ செயலிக்கு மத்திய அரசு தடை!
பயனர்களின் தொலைபேசிகளை பயன்படுத்தி எஸ்எம்எஸ் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விங்கோ செயலிக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த செயலி ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரில் மல்டிலேயர் பொழுதுபோக்கு விளையாட்டு என பட்டியலிடப்பட்டிருந்தது.
செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் பயனரின் செல்போன் மூலம் அறியாமலேயே செய்திகளை அனுப்பியது. இதனால் தினமும் 1.53 கோடி பேருக்கு எஸ்எம்எஸ் சென்றுள்ளது. சிறிய தொகை கிடைக்கும் என ஆசை காட்டியதால் 1.53 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் சைபர் குற்றங்களில் சிக்கியுள்ளனர்.
தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இணைந்து தடை விதித்துள்ளன. இந்த செயலியை விளம்பரப்படுத்திய 4 டெலிகிராம் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!