மழைக்கால சளி, வறட்டு இருமலை விரட்டியடிக்கும் அதிமதுர–மிளகுப் பால்!
நம் உடலில் நோய் தாக்குவதற்கான முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே. இதை இயற்கையாக மேம்படுத்த அதிமதுர–மிளகுப் பால் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. கால் டீஸ்பூன் அதிமதுரத் தூள், ஒரு இலவங்கம், இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகுத் தூள் ஆகியவற்றை ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தாலே போதும். காரத்தன்மை அதிகம் எனத் தோன்றினால் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் இந்த பாலை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். காலை உணவிற்கு பிறகும், இரவு உணவிற்கு முன்பும் குடிப்பது சிறந்தது. ஆனால் மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இந்த பாலை கொடுக்கக் கூடாது என்பதை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிமதுரத்தில் உள்ள ஆண்டி–மைக்ரோபியல் பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக உயர்த்தி, பல்வேறு தொற்றுகள் வராமல் பாதுகாக்கும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கும் தன்மை கொண்டது; மிளகு உடல் சூட்டை உயர்த்தி நோய்களைத் தடுக்கும். இவை அனைத்தும் சேர்ந்து உடல் பலவீனத்தை குறைத்து, சோர்வை நீக்கி, வைரஸ் தொற்றுகளை தடுக்கும் சக்தியைக் கூட்டும் என்பதால் இந்த அதிமதுர–மிளகுப் பாலை பலர் வழக்கமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!