undefined

திருமணமாகி 6 மாதத்தில் கொடூரம்... கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு!

 

திருமணமாகி 6 மாதம் தான் ஆகிறது. இத்தனைக்கும் காதலித்தவனையே மணமுடித்து சந்தோஷமாக பிறந்த வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற பெண். தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாராந்திரப்பள்ளி அருகே மாட்டுமலா பகுதியைச் சேர்ந்த ஷாரோன் (39) மற்றும் அவரது மனைவி அர்ச்சனா (21) 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். 4 மாத கர்ப்பமாக இருந்த அர்ச்சனா திடீரென தீக்குளித்து உயிரிழந்தது அந்த பகுதியை உலுக்கியுள்ளது. வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் அர்ச்சனா எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

வாராந்திரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அர்ச்சனா தன்னைத் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்திருக்கலாம், வலி தாங்க முடியாமல் ஓடி கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட கணிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அர்ச்சனாவின் தந்தை ஹரிதாஸ் அளித்த புகார் வழக்கை புதிய திருப்பத்திற்கு கொண்டு சென்றுள்ளது. “மகளை கணவன் குடும்பம் தொடர்ந்து துன்புறுத்தியது… கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என சந்தேகம் எழுப்பியதும், போலீசார் ஷாரோனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீக்குளிப்பு தற்கொலையா அல்லது துயரமான கொலைவா? உண்மையை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!