கொல்கத்தாவில் மீண்டும் கொடூரம்: இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டுப் பலாத்காரம்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பேருந்து நிலையம் அருகே, பேருந்துக்காகக் காத்திருந்த 28 வயது இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்று, அவருக்கு மதுபானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள கிழக்கு பெருநகரப் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள பேருந்து நிலையத்தில், 28 வயது இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் (நவம்பர் 29) இரவு 9 மணியளவில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.
அப்போது அந்த இடத்திற்கு ஒரு கார் வந்துள்ளது. அந்தக் காரில், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு நபர் இருந்துள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் மூன்று ஆண்கள் அந்தக் காரில் இருந்துள்ளனர். அந்த மூவரும் சேர்ந்து, அந்தப் பெண்ணை பலவந்தமாக வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி, அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மதுபானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். அந்தப் போதை கலந்த பானத்தைக் கட்டாயப்படுத்தி அவரை குடிக்க வைத்துள்ளனர். போதையில் தள்ளாடிய அந்தப் பெண்ணை, காரிலேயே வைத்து அந்த மூன்று பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தங்கள் கொடூரச் செயலைச் செய்து முடித்த பிறகு, அவர்கள் மைதான் பகுதிக்குக் காரை எடுத்து சென்று, அங்கு அந்தப் பெண்ணை இறக்கி விட்டுவிட்டு, மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடூரச் செயல் குறித்துப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், உடனடியாக அந்தப் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த மூன்று குற்றவாளிகளையும் வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், பெண்களின் பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளதுடன், கொல்கத்தாவில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!