கணவர் இறந்த சோகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!
May 17, 2025, 12:50 IST
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கணவர் இறந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி தேவி. ஜெயபால் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால தேவி தனது குழந்தையுடன் வசித்து வந்தார்.
மேலும், குடும்பம் நடத்துவதற்கு போதுமான நிதி இல்லாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தேவி நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!