பெண் தூக்கிட்டு தற்கொலை... போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி. நிலத் தரகர். இவரது மனைவி காளியம்மாள், ஜோதிமணிக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இத்தம்பதி மகன்களின் கல்விச் செலவுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தனராம். அதைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். மறுநாள் உறவினர் ஒருவர் காளியம்மாளைப் பார்க்கச் சென்றாராம். அப்போது, காளியம்மாள் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து கோவையில் உள்ள மகன் கருப்பசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காளியம்மாளின் சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!