பகீர்...  தற்கொலை  முயற்சி நாடகத்தில் புடவை கழுத்தில் இறுக்கி மனைவி பலி...  வீடியோ எடுத்த கணவன்! 

 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலத்தில்  போயினபள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர்  ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் . இவர் ரயில்வே இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு பின்னர் சமாதானமாகி விடுவது வழக்கமாகி விட்டது.  

இந்நிலையில் நேற்று தம்பதியருக்கு இடையே  மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்போது கணவரை மிரட்டும் நோக்கில் கிருஷ்ணவேணி கட்டிலின் மீது நாற்காலியை வைத்து அதன்மேல் ஏறி நின்று புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதைத் தடுக்காமல் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நாற்காலியில் இருந்து கீழே இறங்க முயன்ற கிருஷ்ணவேணியின் கழுத்தில் புடவை இறுக்கமாக சிக்கியதால் அவர் துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!