பெண் விமானியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

 

விமான நிறுவனத்தின் அலுவல் தொடர்பாகப் பெங்களூருவுக்குச் சென்ற 26 வயது பெண் விமானி ஒருவரை, அதே அலுவலகத்தில் பணிபுரியும் சீனியர் விமானி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்த பேகும்பேட் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் சீனியர் விமானியாகப் பணிபுரியும் ஒருவருடன் அலுவல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள அல்சூர் பகுதிக்கு இவர் சென்றுள்ளார்.

பெங்களூரு சென்ற இருவரும் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது, சீனியர் விமானி பெண் விமானியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து அவசரம் அவசரமாக ஐதராபாத் திரும்பினார்.

நடந்த சம்பவம் குறித்து ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் சீனியர் விமானி மீது பெண் விமானி புகார் அளித்தார். இந்தச் சம்பவம் பெங்களூருவின் அல்சூர் காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததால், ஐதராபாத் போலீசார் அந்தப் புகாரை அல்சூர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அதன் பேரில் அல்சூர் போலீசார் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!