undefined

 நகைக்காகப் பெண்ணைக் குத்திக் கொலை செய்த  கணவன், மனைவி !  

 
 

  வாரணாசியைச் சேர்ந்த சீதா என்பவருக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது கணவர் அதிகாலையில் பால் வியாபாரத்திற்காகச் சென்றுவிடுவது வழக்கம். குழந்தை இல்லாத இந்தச் சூழலில், சீதா எதிர்வீட்டில் வசிக்கும் மோஹித் என்பவருடன் பழகத் தொடங்கினார். ஆரம்பத்தில் சாதாரணப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறியது.

இந்த விஷயம் சீதாவின் கணவருக்குத் தெரிய வந்தபோது, அவர் சீதாவைக் கண்டித்துத் தாக்கியுள்ளார். இதனால் கணவனிடம் இருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று சீதா, மோஹித்தை வற்புறுத்தி, தன் மனைவியை விட்டுவிட்டு வந்துவிடுமாறு கேட்டுள்ளார். இந்தக் கள்ளக்காதல் உறவை பணத்தின் மூலம் பயன்படுத்திக் கொள்ள நினைத்த மோஹித், ஒரு மோசமான திட்டத்தை உருவாக்கினார். தனது மனைவியிடம், "சீதாவை கொன்றுவிட்டு, அவள் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு எங்காவது சந்தோஷமாக வாழலாம்" என்று யோசனை கூறியுள்ளார். மோஹித்தின் மனைவியும் இந்தத் திட்டத்திற்குக் கொடூரமாக ஒப்புக்கொண்டார்.

வழக்கம் போல சீதாவின் கணவர் பால் வியாபாரத்திற்கு அதிகாலையில் சென்ற பிறகு, மோஹித்தின் மனைவி சீதாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது பின் வாசல் வழியாக வந்த மோஹித், சீதாவைச் சரமாரியாகக் குத்திக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று பக்கத்து கிராமத்தில் பதுங்கினர். வீடு திரும்பிய சீதாவின் கணவர், தன் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரித்ததில், எதிர்வீட்டு ஜோடி திடீரெனக் காணாமல் போனது தெரிய வந்தது. விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், காணாமல்போன மோஹித் மற்றும் அவரது மனைவியின் தொலைபேசி எண்ணை ட்ரேஸ் செய்து இருவரையும் கைது செய்தனர். இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டது விசாரணையில் உறுதியானது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!