அதிர்ச்சி வீடியோ... பானி பூரி சாப்பிட்ட போது தாடை விலகி வாயை மூட முடியாமல் இளம்பெண் பரிதவிப்பு!
ஔரையா மாவட்டம் திபியாபூர் பகுதியில் வசித்து வருபவர் 42 வயது இன்கலா தேவி. இவர் ஆசை ஆசையாக பானி பூரி சாப்பிட முயற்சித்த போது ஏற்பட்ட விபரீதம் தற்போது அப்பகுதியில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. பானி பூரியை வாயில் போட வாயை பெரிய அளவில் திறந்த தருணத்தில், அவரது தாடை திடீரென விலகி திறந்த நிலையில் முடங்கியது. தாடை மூட முடியாத நிலையில் அவர் கடும் வேதனையுடன் அவசர சிகிச்சை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
குடும்பத்தினர் உடனடியாக அவரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்தவர்கள் மனோஜ் குமார் மற்றும் சத்ருகன் சிங் தாடையை மீண்டும் சரிசெய்ய முயன்றும், தாடை இயல்பு நிலைக்கு வரவில்லை. இதனையடுத்து இன்கலா தேவியை சிறப்பு சிகிச்சைக்காக சிச்சோலி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றினர். மருத்துவர்கள் கூறுகையில், “வாயை திடீரென அதிகமாகத் திறப்பதால் தாடை வெளியேறுவது சிலருக்கு நிகழக்கூடிய விஷயம். சாப்பிடும் போது கூட இது நடக்க வாய்ப்புள்ளது” என்றனர்.
சிறப்பு சிகிச்சைக்குப் பிறகு இன்கலா தேவியின் தாடை மீண்டும் சரியான நிலையில் கொண்டுவரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரு சாதாரண பானி பூரி காரணமாக மருத்துவமனையிலேயே போக நேர்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!