அரசு பேருந்துகளை இயக்க பெண்கள் ஓட்டுநர்கள்… மாநில அரசின் புதிய முடிவு!
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசு பேருந்துகளை இயக்க பெண் ஓட்டுநர்களை நியமிக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர மொகபத்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஜனவரி 3-ம் தேதி அரசு பேருந்து விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்றும், இதில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் மற்றும் ஓட்டுநர் ஒழுக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!