undefined

 மகளிர் உரிமைத் தொகை உயருமா?... பெண்களில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

 

சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி திமுக அரசு மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினார். தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1.30 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை முன்மாதிரியாக கொண்டு புதுச்சேரி அரசும் மகளிருக்கு ரூ.1000 வழங்கி வந்தது. தற்போது அந்தத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவு பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த உயர்வு காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ.17.50 கோடி செலவாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1500 அல்லது ரூ.2000 ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், தொகை உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார். இதனால் பெண்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!