மாதம் ரூ2500 /- மகளிர் உரிமைத் தொகை... விஜய் அதிரடி அறிவிப்பு !
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெண்களுக்கான பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார். 60 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும், மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மட்டும் இந்த திட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் தரமான பட்டு சேலை அண்ணன் சீராக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அத்துடன் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், குழந்தைகள் பள்ளியை விட்டு விலகுவதைத் தடுக்க தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை வழங்கப்படும் என்றும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பிற்காக தனி இலாகா உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!