undefined

  இன்று முதல் மகளிர் டி20… இலங்கைக்கு எதிராக இந்தியா அதிரடி தொடக்கம்...

 
 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.

பந்துவீச்சில் ரேனுகா சிங், சரணி, சினே ராணா, கிராந்தி கவுட் ஆகியோர் பலமாக உள்ளனர். கடந்த மாதம் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சாமரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்க வேண்டிய நிலை. இதுவரை இரு அணிகள் மோதிய 26 டி20 போட்டிகளில் இந்தியா 20 வெற்றிகளை பெற்றுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையே இறுதி இலக்கு என ஹர்மன்பிரீத் கூறியுள்ளார். தொடரின் மீதமுள்ள போட்டிகள் விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!