undefined

 டிசம்பர் 12  முதல் மகளிர் உரிமை தொகை... துணை முதல்வர் உதயநிதி உறுதி ! 

 
 

சிவகாசியில் நடைபெற்ற மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். இதுவரை 1.15 கோடி பெண்களுக்கு தொடர்ந்து உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் மீண்டும் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக உதயநிதி கூறினார். மத்திய அரசின் தடைகளை தாண்டியும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றும் வலியுறுத்தினார். 27 மாதங்களாக பெண்களுக்கு உரிமைத்தொகை தடையின்றி வழங்கப்பட்டு வருவதை அவர் நினைவுபடுத்தினார்.

பெண்கள் விடுதலையின் அடித்தளத்தை தந்தை பெரியார் அமைத்தார்; அவரது சிந்தனைகளைக் சட்டமாக்கியவர்கள் அண்ணாவும் கலைஞரும் என உதயநிதி கூறினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடும், இந்தியாவில் முதல் பெண் காவலர்களை நியமித்ததும் கலைஞரின் சாதனைகள் என அவர் குறிப்பிட்டார். தற்போது மகளிர் இலவச விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற பெண்கள் வளர்ச்சி திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் புகழ்ந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!