கல்குவாரியில் மண்சரிவில் தொழிலாளர் உயிரிழப்பு!
பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில், திருச்சி மாவட்டம் மேல்கல் காண்டார் கோட்டையைச் சேர்ந்த பரந்தாமன் சொந்தமான கல் குவாரியில் விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் பாறைகளுக்கு வெடிவைத்து தகர்த்து தலவாட பொருட்களை எடுப்பதில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாறை மண் சரிந்து விழுந்தது. இதில் முசிறி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்ற கூலித் தொழிலாளர் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்பு பணிகள் நடக்கவில்லை.
இன்று காலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மண்சரிவில் சிக்கிய தொழிலாளரின் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பரத் என்ற மற்றொரு தொழிலாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த இடத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி மிருணாளினி மற்றும் மாவட்ட காவல் காணிப்பாளர் திருமதி G.S அனிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பெரிய அளவிலான பாறைகள் சரிந்து விழுந்ததால் மீட்பு பணி சிக்கலானது. பாடாலூர் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரிகளில் மண்சரிவினால் உயிரிழப்புகள் தொடர்வதால் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!