undefined

பணம் வரல...  ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து  நொறுக்கிய தொழிலாளி!  

 
 

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் துருவகெரே மெயின் ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் நடந்த விசித்திரச் சம்பவம் உள்ளூர் மக்கள் மற்றும் போலீசாரையே குழப்பத்தில் ஆழ்த்தியது. கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இரவு, ஒரு நபர் பணம் எடுக்க வந்ததுடன், ஏ.டி.எம். எந்திரம் மற்றும் மையத்திலிருந்த கண்ணாடி, பொருட்கள் அனைத்தையும் திடீரென அடித்து நொறுக்கி விட்டு சென்றதை மறுநாள் மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் விசாரணை தொடங்கினர்.

முதல் கட்ட விசாரணையில் பணம் கொள்ளை போகவில்லை என்பதும், எந்திரம் சீர்குலைக்கப்பட்டிருந்தது மட்டுமே தெரியவந்தது. கொள்ளைக்காரர்கள் முயற்சி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்த நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில்தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. குடிபோதையில் இருந்த ஒருவன் பணம் எடுக்க முயன்றும், பணம் வராததால் கோபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தையே அடித்து நொறுக்கியது பதிவாக இருந்தது.

இந்த விவகாரத்தில் துருவகெரே போலீசார் தொடர்ந்து நடத்திய தேடுதலின் அடிப்படையில் வடிவேல்சாமி என்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார். குடிபோதையில் இருந்ததால் பணம் வராத கோபத்தில் எந்திரத்தை உடைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!