undefined

இந்தியாவுக்கு ரூ.91,000 கோடி வரை   கடன் உதவி... உலக வங்கி  உறுதி!

 

உலக வங்கி அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் ரூ.73,000 கோடி முதல் ரூ.91,000 கோடி வரை இந்தியாவுக்கு கடன் வழங்கத் தயாராக உள்ளது. புதிய ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் உலக வங்கி மற்றும் இந்தியா இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இதனை முடிவு செய்தது. இது இந்தியாவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் உலக வங்கி தலைவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நிதியுதவி தனியார் முதலீட்டுடன் இணைந்து அரசும் முதலீடு செய்யும்போது ஊரக, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளனர். உலக வங்கியுடன் இணைந்து செயல்படுவதால் திட்டங்கள் விரைவாக செயல்படும் மற்றும் தொழில்நுட்ப உதவி, சிறந்த நடைமுறைகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

அறிக்கையின் படி, இந்தியா உலகின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் 1.2 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கிறார்கள். வேலைவாய்ப்பை அதிகரிக்க முக்கியம்: உள்கட்டமைப்பில் முதலீடு, தொழில் நடக்கும் சூழல் உருவாக்கம், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க இடையூறுகளை குறைத்தல். இதில் உலக வங்கி பெரும் பங்கு வகிக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!