பீதியில் உலக நாடுகள்.. ஈக்குவடாரில் பயங்கர நிலநடுக்கம்.. அதிகரிக்கும் உயிர் பலிகள் !

 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்குவடார் நாட்டின் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில் நேற்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த மாகாணத்தின் பாலோ நகரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அந்த நகரத்தில் இருந்த கட்டிடங்கள் இடிந்தன. முன்னதாக 12 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,தற்போது பலி எண்ணிக்கை 14-ஆகி உயர்ந்துள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தால் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும். இந்த நிலநடுக்கத்தால் 44 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 90 வீடுகள், 50 கல்வி கட்டிடங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி சிரியாவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இது உலக நாடுகளிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!